சுங்கை பட்டாணி, செப்டம்பர் -2, கெடா, சுங்கை பட்டாணி, ஜாலான் குவாலா கெட்டிலில் நின்று நின்று செல்லும் நகரப் பேருந்து நேற்று மாலை தீப்பிடித்ததில், அதிலிருந்த பயணிகள் பரபரப்பான நிமிடங்களை எதிர்கொண்டனர்.
எனினும், பேருந்து ஓட்டுநரும் 7 பயணிகளும் காயமேதுமின்றி உயிர் தப்பினர்.
பேருந்து முழுவதுமாக எரிந்து போனது.
சம்பவத்தின் போது பாலிங்கிலிருந்து சுங்கை பட்டாணியை நோக்கி பேருந்து போய்க்கொண்டிருந்தது.
மாலை 4.30 மணிக்குள்ளாக தீ அணைக்கப்பட்ட நிலையில், தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.