Latestமலேசியா

சுபாங் ஜெயாவில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரியைக் களவாடிய கும்பல் சிக்கியது

சுபாங் ஜெயா, டிசம்பர்-31, லாரி திருட்டில் சம்பந்தப்பட்ட 5 ஆடவர்கள் சிலாங்கூர், சுபாங் ஜெயா, பண்டார் பிங்கீரான் சுபாங்கில் போலீசிடம் சிக்கியுள்ளனர்.

UEP சுபாங், USJ 1/25 சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிறுவனத்திற்குச் சொந்தமான Isuzu Delta லாரி சனிக்கிழமைக் காணாமல் போனதாக, உள்ளூர் ஆடவர் முன்னதாக புகாரளித்திருந்தார்.

எனினும் சில மணி நேரங்களிலேயே, காணாமல் போன லாரியையும், Hyundai Starez ரக MPV வாகனத்தையும் போலீஸ் கண்டுபிடித்தது.

அப்போது நடத்திய சோதனையில் 27 முதல் 37 வயதிலான அந்த 5 சந்தேக நபர்களும் சிக்கியதாக, சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமாட் (Wan Azlan Wan Mamat) கூறினார்.

வீடுடைத்து திருட பயன்படுத்தும் பல்வேறு கருவிகளும் கைப்பற்றப்பட்டன.

பின்னர் பூச்சோங் IOI பேரங்காடியில் Perodua Axia காரும் பறிமுதல் செய்யப்பட்டது; அதில் திருடப்பட்ட குளிரூட்டிகளும் எரிவாயு தோம்புகள் இருந்தன.

கைதான ஐவருமே பழையக் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர்.

விசாரணைக்காக 4 நாட்களுக்கு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக வான் அஸ்லான் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!