Latestமலேசியா

சுபாங் விமான நிலையத்தில் சிறு ரக விமானம் அவசரமாக தரையிறங்கியது

சுபாங் , ஏப் 26 – சுபாங்  Sultan Abdul Aziz Shah விமான நிலையத்தில்   இன்று சிறு ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது.  அந்த விமானம் புறப்பட்ட அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள்   அவசரமாக தரையிறங்கியது.  Diamond DA -42  சிறு ரக விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள்   Techstrait Ltd  நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தை   பாதுகாப்புடன் தரையிறக்கியதாக  மலேசிய  பொது  விமான நிர்வாகத்தின்   தலைமை நிர்வாக அதிகாரி  டத்தோ NORAZMAN BIN MAHMUD தெரிவித்தார். 

அந்த விமானம் காலை 8. 26 மணியளவில் Sultan Abdul Aziz Shah  விமான நிலையத்திலிருந்து  புறப்பட்ட  இரண்டு நிமிடங்களில்   அவசரமாக   தரையிறங்குவதற்கு  விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்புகொண்டதைத் தொடர்ந்து காலை  மணி 8.28 அளவில்   தரையிறங்கியதாக இன்று வெளியிட்ட அறிக்கையில்   Norazman  தெரிவித்தார். இது தொடர்பாக   விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!