Latestமலேசியா

சுற்றுலா பயணிகள் “ஆட்டோகேட்” பயன்படுத்துவதால் பாதுகாப்புக்கு பாதிப்பு எதுவும் இல்லை

கோலாலம்பூர், நவ 19 – 63 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு Autogate எனப்படும் தானியங்கி நுழைவாயில் அமைப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பு அம்சங்களில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. தானியங்கி நுழைவாயில் முதலில் மலேசியர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றாலும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததால் சுற்றுப்பயணிகளும் அதனை பயன்படுத்தும் முடிவை அரசாங்கம் எடுத்ததாக உள்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ சைபுடின் நசுடின் இஸ்மாயில் ( Saifuddin Nasution Ismail ) தெரிவித்தார்.

நாங்கள் பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தவில்லை என்றாலும், சுற்றுப்பயணிகள் தனியாங்கி வாயிலில் நுழையும் போது, ​​நாங்கள் அவர்களை ஸ்கேன் செய்கிறோம், பதிவுகளை வைத்திருக்க எங்களுக்கு அது போதுமானதாக இருக்கிறது. மேலும் உலகம் முழுவதிலுமே குடிநுழைவு முறை இந்த இலக்கை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் பெசுட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சே முகமட் சுல்கிப்ளி ஜூசோவின் ( Che Mohamad Zulkifli jusoh ) துணைக் கேள்விக்கு பதிலளித்தபோது சைபுடின் இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!