Latestமலேசியா

செந்தூல் தாமான் ஸ்ரீ முர்னி அடுக்கு மாடி அடுக்ககத்திலிருந்து கீழே விழுந்து இந்திய வர்த்தகர் மரணம்

கோலாலம்பூர், ஏப் 21 – செந்தூல் Taman Sri Murni-யிலுள்ள அடுக்ககத்திலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் இந்திய வர்த்தகர் ஒருவர் இறந்து கிடந்தார். அதிகாலை 4 மணியளவில் பயங்கர சத்தம் வந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அங்குள்ள கார் நிறுத்துமிடத்தில் உள்ள கார் மீது ஆடவர் ஒருவரின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவரின் கார் மீது ஆடவர் ஒரு விழுந்து கிடந்தது குறித்து அதிகாலை மணி 4.10 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக Sentul மாவட்ட போலீஸ் தலைவர் Ahmad Sukarno Mohamad Zahari தெரிவித்தார்.

Jinjang போலீஸ் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 48 வயதுடைய இந்தியை பிரஜை மரணம் அடைந்ததாக அடையாளம் கூறப்பட்டது. அந்த ஆடவரின் மரணத்தில் எந்தவொரு குற்றச் செயலும் தொடர்பில்லை என்பதோடு அவர் திடீர் மரணம் அடைந்ததாக வகைப்படுத்தப்பட்டதாக Ahmad Sukarno கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!