Latestஅமெரிக்காஉலகம்

செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வெளியீடு: ரசிகர்கள் ஆவல்

சான் பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 27-ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோனை செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தவிருக்கிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. புதிய ஐபோன் தொடர், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஐபோனாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய முதலாவது ஐபோன், அதன் விற்பனை விலை மற்றும் லாப வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக அமையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புதிய ஐபோன், ஐபாட் மினிக்கு நிகரான திரை அளவுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஐபோன் அறிமுக நிகழ்வு, புதிய தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ள John Ternusசின் முதலாவது பெரிய நிகழ்வாகும். அவர் செப்டம்பர் 1 ஆம் தேதி ஆப்பிளின் தலைமைச் செயல்முறை அதிகாரியாகப் பொறுப்பேற்கவிருக்கிறார். அவர் தற்போது ஆப்பிளின் வன்பொருள் (Hardware) பிரிவுத் தலைவராக இருக்கிறார்.

சிப் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் பயனீட்டாளர் மின்னணு சந்தை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மடிக்கக்கூடிய போன்கள் சந்தைக்கு புதிய வளர்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதில் சாம்சங் (Samsung) ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தென் கொரிய நிறுவனமான சாம்சங், ஆப்பிளுக்கு போட்டியாக புதிய மடிக்கக்கூடிய போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனிடையே, 2027ஆம் ஆண்டுக்குள் ஆப்பிள் 17 மில்லியனுக்கும் அதிகமான மடிக்கக்கூடிய ஐபோன்களை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக IDC ஆய்வு நிறுவனத்தின் கணிப்பு கூறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!