
கோலாலாம்பூர், ஏப்ரல்-6-செராஸில் உள்ள ஒரு கேளிக்கை மையம் கும்பலொன்றால் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு லாரியை கொண்டு வந்து, அம்மையத்தின் வேலியை மோதச் செய்த அக்கும்பல், பின்னர் உள்ளே புகுந்து ஏராளமான பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியது.
இது குறித்து நேற்றிரவு புகார் கிடைத்த நிலையில், இதுவரை கைது எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக, கோலாலாம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus கூறினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் போலீஸை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



