
கோலாலம்பூர், ஜூலை – சைபர் ஜெயாவில் 20 வயது பல்கழைக்கழக மாணவியை கொலை செய்ததன் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகள் ஜூலை 10 ஆம் தேதிவரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர். இதற்கு முன்னர் தடுத்துவைக்கப்பட்ட உத்ரவை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு மாஜிஸ்திரேட் கைருத்துல் அனிமா (Khairatul Animah) அனுமதித்துள்ளதாக செப்பாங் போலீஸ் தலைவர் Norhizam Bahaman தெரிவித்தார்.
மாணவி Maniishapriet Kaur Akhara கொலை தொடர்பில் ஒரு ஆடவன் , 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு பெண்களை ஜோகூர் பாரு, , நெகிரி செம்பிலான் Gemenche வில் ஜூன் 26 ஆம்தேதி காலை 9 மணிக்கும் , ஜூ 27 ஆம்தேதி அதிகாலை 2 மணிக்குமிடையே போலீசார் கைது செய்தனர். Maniishapriet Kaurருக்கு அனைத்து மூன்று சந்தேகப் பேர்வழிகளும் அறிமுகமானவர்கள் என இதற்கு முன் Norhizam கூறியிருந்தார். ஜூன் 24 ஆம் தேதி அடுக்ககம் ஒன்றில் காலை 10 மணியளவில் Maniishapriet இறந்து கிடந்தது அவரது தோழியின் மூலம் தெரியவந்தது.
இதனிடையே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தேகப் பேர்வழியான ஆடவனை கொலையுண்ட மாணவியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் திட்டிக்கொண்டே நெருங்கியபோது ஏற்பட்ட நெருக்கடியை தவிர்ப்பற்கு போலீசார் தலையிட்டனர். சிவப்பு டீ சட்டை அணிந்திருந்த நபர் , “எனது சகோதரியை கொன்றுவிட்டாயே ” என்று கூச்சலிட்டுக்கொண்டே நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய சந்தேகப் பேர்வழியை நெருங்கியபோது தேவையில்லாத அசாம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் உடனடியாக தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.