Latestமலேசியா

அரசாங்க கிளினிக்குகளில் அவசர சிகிச்சை நேரத்தை நீட்டிக்கும் திட்டத்தை சுகாதார அமைச்சு கொண்டிருக்கவில்லை

கோலாலம்பூர், மார்ச் 10 -அரசாங்க கிளினிக்குகளின் செயல்படும் அவசர சிகிச்சை நேரத்தை நீடிக்கும் உடனடி திட்டம் எதனையும் சுகாதார அமைச்சு கொண்டிருக்கவில்லையென மேலவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பல மருத்துவமனைகளில் கிளினிக்குகளின் நேரத்தை நீடிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டதால் அவசர ஆபத்து துறைகளில் பச்சை மண்டலப் பகுதிகளில் நெரிசல் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லையென சுகாதாரத்துறை துணையமைச்சர் லுக்கானிஸ்மான் அவாங் சவ்னி (Lukanisman Awang Sauni) தெரிவித்தார்.

கினினிக்குகளில் அவசர துறைகளில் பச்சை மண்டலங்களில் நெரிசலை தீர்ப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை தாங்கள் இன்னும் ஆராய்ந்து வருவதாக இன்று மேலவையில் கேள்வி நேரத்தில் பதில் அளித்தபோது அவர் கூறினார்.

அரசாங்க மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு நேரம் நீட்டிக்கபடுவதால் ஏற்படும் நெரிசல் பாதிப்பு குறித்து டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்ட துணைக் கேள்விக்கு Lukanisman பதிலளித்தார்.

நாடு முழுவதும் அரசாங்க மருத்துவமனைகளில் பசுமை மண்டலங்களில் நெரிசலைக் குறைக்க 2008 ஆம் ஆண்டில் அவசர நேரங்கள் நீடிக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனைகளில் அவசரை சிகிச்சைப் பிரிவில் நெரிச்சலை குறைப்பதற்கு சுகாதார அமைச்சிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!