Latestமலேசியா

‘ஜனநாயகன்’ பட கசிவு: 6 பேர் கைது; 300-க்கும் மேற்பட்ட இணைய இணைப்புகள் நீக்கம்

சென்னை, ஏப்ரல்-14-நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத் தளங்களில் கசிந்த விவகாரத்தில், தமிழக இணையக் குற்றத் தடுப்புப் போலீஸார் 6 பேரைக் கைதுச் செய்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனமான KVN Productions அளித்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைதான நபர்கள் google drive மற்றும் cloud storage மூலமாகப் படத்தின் காட்சிகளைப் பகிர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸாரின் தீவிர முயற்சியால் இதுவரை 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய link இணைப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் பிரத்யேக உரிமம் தயாரிப்பு நிறுவனத்திடமே உள்ளது என்றும், திருட்டுத்தனமாகப் படத்தைப் பார்ப்பவர்கள் அல்லது பகிருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைத் தளங்களை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஜனவரியிலேயே திரைக்கு வந்திருக்க வேண்டிய ‘ஜனநாயகன்’ தணிக்கைப் பிரச்னையால் மாதக் கணக்கில் முடங்கிக் கிடக்கும் நிலையில், முழுப் படமும் HD தரத்தில் இணையத்தில் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!