
ஈப்போ, அக்- 14 – தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகள் மற்றும் அமானுஷ்ய நம்பிக்கைகளை மையமாகக் கொண்ட ‘Sawadee Screamfest 5’ திகில் நிகழ்ச்சி, தம்புனில் சன்வே லாஸ்ட் வேர்ல்டில் (Sunway Lost World of Tambun) அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் நடைபெறவுள்ளது.
ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 8 திகில் வீடுகள், 5 பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் 7 நேரடி நிகழ்ச்சித் தளங்கள் இடம்பெறுகின்றன. தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட மர்மமான சூழல்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் பார்வையாளர்களுக்குப் புதுமையான திகில் அனுபவம் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சி முழுவதும் சன்வே லாஸ்ட் வேர்ல்ட் ஆஃப் தம்புன் குழுவினரால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஈப்போவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி அக்டோபர் 16, 17, 18, 23, 24, 25, 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 7.25 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். நுழைவுச்சீட்டு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு [https://sunwaylostworldoftambun.com/screamfest5/](என்ற இணையத்தளத்தை அணுகலாம்.



