Latestமலேசியா

ஜாசினின் கடல் உணவு உணவகத்தில் திருட்டு: ரொக்கம் & ‘மந்தாராங்’ சிப்பிகள் களவு

ஜாசின், ஏப்ரல்-13-மலாக்கா, ஜாசினின் உள்ள ஒரு பிரபலமான கடல் உணவு உணவகத்திற்குள் புகுந்த திருடர்கள், அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரிங்கிட் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பணத்துடன் சேர்த்து அங்கிருந்த பெருமளவிலான ‘மந்தாராங்’ (Mentarang) வகை சிப்பிகளையும் அவர்கள் திருடிச் சென்றனர்.

நேற்று காலை 8 மணியளவில் உணவகத்தைத் திறக்க வந்த உரிமையாளர், பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த உயர்தர ‘மந்தாராங்’ மூட்டைகளும் காணாமல் போயிருந்தன.

1 கிலோ கிராம் Belitung வகை சிப்பிகள், _horseshoe carb_ எனப்படும் 5 குதிரை லாட நண்டுகளும் களவுப் போயின.

இவை வெளியில் கொண்டு விற்பனை செய்யப்படுவதற்காக திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

CCTV காட்சிகளைப் போட்டுப் பார்த்ததில், தமக்கு அறிமுகமான ஒருவரே இந்த திருட்டு வேலையைச் செய்திருப்பது தெரிய வந்ததாக, Bakau-Bakau Siring எனும் அக்கடையின் உரிமையாளர் ஏமாற்றத்துடன் கூறினார்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது குறைந்த விலைக்கு ‘மந்தாராங்’ விற்பனை செய்ய முற்பட்டால் கவனமாக இருக்குமாறும், வீடியோ வாயிலாக அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!