Latestமலேசியா

ஜோகூரில் நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படுகின்றன

ஜோகூர் பாரு, அக்டோபர்-25,கடும் புகைமூட்டம் காரணமாக ஜோகூரில் மூடப்பட்டிருந்த அனைத்துப் பள்ளிகளும் கல்வி நிலையங்களும் நாளை திங்கட்கிழமை, அக்டோபர் 26-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

கடந்த 5 நாட்களாக மாநிலம் முழுவதும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, கல்வி மற்றும் தகவல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Dr Muhammad Naqib Md Ghazali தெரிவித்தார்.

ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் உத்தரவுக்கு ஏற்ப, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதோடு, ஆண்டு இறுதித் தேர்வுகள் மற்றும் SPM தேர்வுக்கான தயார்நிலையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, சுவாசக் கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதுடன், புகைமூட்ட நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, புகைமூட்டம் காரணமாக ஜோகூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் அக்டோபர் 8 தொடங்கி மூடப்பட்டதால், சுமார் 600,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!