
கோலாலம்பூர், அக்டோபர்-25,’மக்கள் ஓசை’ நாளிதழின் மூத்த செய்தி ஆசிரியரும், உள்ளூர் தமிழ் ஊடகத் துறையின் முக்கிய ஆளுமையுமான ராஜன் பூபாலனின் மறைவு, ஊடகத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பி. ராஜன் என பரவலாக அழைக்கப்படும் 68 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாகச் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார்.
முன்னதாக, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அலுவலகத்தின் பிரதிநிதிகள் நேரில் சென்று நலம் விசாரித்து உதவிகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங்கும் நேரில் சென்று கண்டார்.
மலேசியத் தமிழ் பத்திரிகைத் துறைக்கு பி. ராஜன் ஆற்றியை சேவைகள் விலைமதிப்பற்றவை.
அவரது இழப்பு நாட்டு ஊடகத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை திங்கட்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிலாங்கூர், பத்து கேவ்ஸ், தாமான் செலாயாங் உத்தாமாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் வணக்கம் மலேசியா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



