Latestமலேசியா

பிறக்கும்போதே மீசையுடன் குழந்தை? இணையத்தில் வைரலாகும் வீடியோ

கோலாலம்பூர், அக்டோபர்-25,பிறந்த குழந்தை ஒன்று அடர்த்தியான மீசை மற்றும் சிறிய தாடியுடன் காணப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இக்குவாடோர் நாட்டைச் சேர்ந்ததாகக் கூறப்படும் அந்த வீடியோவில், பச்சிளம் குழந்தை வயதான ஆடவரைப் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது.

இதனைப் பார்த்த இணையவாசிகள், குழந்தை பிறக்கும்போதே @3 பிள்ளைகளுக்கும் தந்தையாகி, 2 வீட்டுக் கடன்களுடன் ஓய்வுபெற்றுவிட்டதாக நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குழந்தையின் மீசை AI தொழில்நுட்பத்தின் மூலம் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பிறந்த குழந்தைகளுக்கு இயற்கையாக மெல்லிய முடிகள் இருக்கலாம் என்றாலும், வீடியோவில் இருப்பதைப் போன்ற அடர்த்தியான மீசை வளர்வதற்கான மருத்துவ ஆதாரங்கள் இல்லை.

வீடியோவின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில், இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என்றே பரவலாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!