Latestமலேசியா

கள்ளக் குடியேறிகளுக்கு வீடுகளை வாடகைக்கு விடாதீர்; வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர்-25,கள்ளக் குடியேறிகளுக்கு வீடுகளை வாடகைக்கு விட வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முறையான ஆவணங்களின்றி நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவதால், அடிதடி மற்றும் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் ஏற்படக்கூடும் என தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கனி எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, ஒரே வீட்டில் அளவுக்கு அதிகமானோர் தங்கியிருப்பது குடியிருப்புப் பகுதிகளின் பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

கோலாலம்பூர், கம்போங் பாண்டானில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அவற்றைக் கட்டுப்படுத்தப் போலீஸுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

எனவே, வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வருபவர்களின் பின்னணியை முதலிலேயே முறையாகச் சரிபார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதே சமயம், சந்தேகத்திற்குரிய குற்றச்செயல்களை பொது மக்கள் தாங்களாகவே எதிர்கொள்ளாமல், போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என, மத்திய அமைச்சருமான ஜொஹாரி கனி அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!