Latestஉலகம்

பினாங்கிலிருந்து ஹோங் கோங் சென்ற மற்றொருவரிடம் cocaine பறிமுதல்; இரண்டாவது நபர் கைது

ஹோங் கோங், அக்டோபர்-26,பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஹோங் கோங் சென்ற மற்றொரு பயணியிடமிருந்தும் கொக்கேய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

பினாங்கில் இருந்து விமானம் மூலம் வந்த 39 வயது சீனப் பிரஜையிடமிருந்து 2.2 கிலோ கொக்கேய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாக,
ஹோங் கோங் சுங்க மற்றும் கலால் இலாகா கூறியது.

இதன் சந்தை மதிப்பு சுமார் 677,000 ரிங்கிட்டாகும்.

கடந்த வியாழக்கிழமையும் இதேபோல் பினாங்கில் இருந்து வந்த 25 வயது ஆடவரிடம் இருந்து 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

​கைதுச் செய்யப்பட்ட நபர் மீது போதைப்பொருள் விநியோகப் பிரிவு கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹோங் கோங் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலுக்கு ஆயுள் தண்டனையும், மில்லியன் கணக்கில் அபராதமும் விதிக்கப்படலாம்.

​அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இச்சம்பவங்கள் தொடர்பாக மேல் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!