
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-26,பினாங்கில் நிலச்சரிவு அபாயங்கள் குறித்து பலமுறை எச்சரித்தும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக மலேசிய இயற்கை நண்பர்கள் சங்கமான SAM குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று பாயா தெருபோங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 73 வயது மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அச்சங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மலைச்சரிவுகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்ததாக SAM தலைவர் மீனாட்சி ராமன் தெரிவித்தார்.
இந்த உயிரிழப்பைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்பது குறித்து பினாங்கு மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, நேற்று தஞ்சோங் தோக்கோங்கில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் இரண்டு கார்கள் பாதி அளவுக்கு மண்ணில் புதைந்தன.
எனினும், அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



