
ஜோகூர் பாரு, டிசம்பர்-4, ஜோகூர் பாரு, பத்து புத்ரியில் அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்திலிருந்து நவம்பர் 11-ஆம் தேதி ஒரு கார் களவுபோன சம்பவம் தொடர்பில், 3 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
சாவி இல்லாமலேயே, வாகனத்தை இயக்கும் அமைப்பு முறையை ஊடுருவக் கூடியக் கருவியும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோகூர் பாரு வட்டாரத்தில் வாகனத் திருட்டை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட Op Lejang சோதனை நடவடிக்கையின் போது அக்கும்பல் கைதானது.
ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் (Raub Selamat) அதனை உறுதிப்படுத்தினார்.
கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் காணாமல் போனதாக 56 வயது உரிமையாளர் முன்னதாக புகார் செய்திருந்தார்.
உடனடியாக துப்புத் துலங்கிய போலீஸ், ஜாலான் பாயு புத்ரியில் உள்ள ஹோட்டலில் அவர்களைக் கைதுச் செய்தது.
அவர்கள் களவாடியை Chevrolet காரும் மீட்கப்பட்டது.
20 முதல் 39 வயது வரையிலான சந்தேக நபர்களில் ஒருவன் ஏற்கனவே 21 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
அதோடு, கைதான போது மூவருமே போதைப்பொருள் உட்கொண்டிருந்தனர்.