ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-23 – ஜோகூர் பாருவில் பெண்ணொருவரின் காரைப் பின் தொடர்ந்த வெளிநாட்டு ஆடவர் கைதாகியுள்ளார்.
28 வயது பெண்ணின் காரை ஆடவர் ஒருவரின் கார் பின் தொடருவதைக் காட்டும் வீடியோ வைரலானதை அடுத்து போலீஸ் விசாரணையில் இறங்கியது.
வியாழக்கிழமை மதியம் கைதான 35 வயது அந்த வெளிநாட்டு ஆடவர், போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
அதோடு, அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம் இந்நாட்டில் தங்கியிருந்த குற்றத்தையும் அவர் புரிந்துள்ளார்.
இதையடுத்து விசாரணைகளுக்கு உதவும் பொருட்டு செப்டம்பர் 5 வரை 14 நாட்களுக்கு அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குடிநுழைவுத் துறை சட்டத்தை மீறியதற்காக அவருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தனியாக 5 ஆயிரம் ரிங்கிட்டும் ஈராண்டுகள் சிறையும் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.