சித்தியவான், ஏப் 11 – பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரும் , உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் டாக்டர் ராமசாமியின் அக்காவான முத்தம்மாள் பழனிச்சாமி நேற்று ஏப்ரல் 10ஆம் தேதி காலமானார். அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று ஏப்ரல் 11ஆம்தேதி வியாழக்கிழமை மதியம் 12 மணி தொடங்கி , எண் 34, Taman Pegawai, Sitiawan. Perak என்ற முகவரியிலுள்ள இல்லத்தில் நடைபெறும் . சகோதரியை பிரிந்து துயருறும் டாக்டர் ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.