Latestமலேசியா

டுங்குனில் UiTM பல்கலைக்கழக மாணவர்கள் பலி; கோர விபத்தை ஏற்படுத்திய மாது 4 நாட்கள் தடுத்து வைப்பு

குவாலா திரங்கானு, அக்டோபர்-10, திரங்கானு, டுங்குனில் 2 மோட்டார் சைக்கிள்களை மோதி, UiTM பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உயிரிழக்கக் காரணமான மாது, விசாரணைகளுக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் 49 வயது அம்மாது, முன்னதாக குவாலா திரங்கானு மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஏதுவாக அவரைத் தடுத்து வைக்க மேஜிஸ்திரேட் ஆணைப் பிறப்பித்தார்.

நேற்றிரவு 7 மணி வாக்கில் Kampung Sura Hujung-கிலுள்ள UiTM பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே அக்கோர விபத்து நிகழ்ந்தது.

Kuala Dungun-னிலிருந்து Pantai Teluk Gadung நோக்கி 4 மாணவர்களும் சென்றுகொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை, பின்னால் வந்த அம்மாதுவின் SUV கார் வேகமாக மோதியது.

அதில் இரண்டாமாண்டு மாணவர்களான Muhammad Akmal Md Tukirin, Ku Adib Aizad Ku Azmi, Khairil Anwar Jamaludin ஆகிய மூவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

அவர்களின் சகாவான Muhammad Ammar Danish Mohammad Ridhuan படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!