Latestமலேசியா

தலைமுடி தானம்: புற்றுநோய் குழந்தைகளுக்கு உதவ RM13,400 திரட்டிய சகோதரிகள்

குழந்தைப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, இரண்டு பதின்ம வயது சகோதரிகள் மேற்கொண்ட முயற்சி மூலம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 13, 400 ரிங்கிட் நிதி திரட்டப்பட்டுள்ளது.

16 வயதான Erin Choong David மற்றும் அவரது 14 வயது சகோதரி Kaeylyn Choong David ஆகியோர் இந்த நிதி திரட்டும் முயற்சியை மேற்கொண்டனர்.

திரட்டப்பட்ட தொகையில் 12,000 ரிங்கிட் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளுக்கு உதவும் வகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலேசியக் குழந்தைகளுக்கானச் சங்கமான CCAM-க்கு வழங்கப்பட்டது.

மேலும் 1,400 ரிங்கிட், புற்றுநோயாளிகளுக்கான தலைமுடி தானம் மற்றும் தோப்பா முடி தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் Locks of Hope Malaysia அமைப்புக்கு வழங்கப்பட்டது.

Kaeylyn தனது தலைமுடியை வெட்டி தானமாக வழங்க முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த முயற்சி தொடங்கியது.

பின்னர் அவரது சகோதரி Erin-னும் இதில் இணைந்தார்.

கீமோதெரஃபி சிகிச்சையின் போது தலைமுடியை இழக்கும் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், இருவரும் தலா சுமார் 10 அங்குல தலைமுடியை தானமாக வழங்கினர்.

ஆரம்பத்தில் 3,500 ரிங்கிட் மட்டுமே திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் அது 5,000-மாகவும், தொடர்ந்து 10,000 ரிங்கிட்டாகவும் உயர்த்தப்பட்டது.

குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் மலேசியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த நன்கொடையாளர்களின் ஆதரவுடன், அவர்கள் இலக்கைத் தாண்டி நிதி திரட்டினர்.

இந்த முயற்சியை “குழந்தைகளுக்கு குழந்தைகளே உதவும் சிறந்த உதாரணம்” என, CCAM நிறுவனரும் தலைவருமான லாவண்யா கணபதி பாராட்டினார்.

இந்த நிதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவமனை கட்டணம், சிகிச்சை மற்றும் இதர மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளுக்கு Erin மற்றும் Kaeylyn சகோதரிகள் தெரிவித்த செய்தி மிகவும் எளிமையானது — “மனதைத் தளரவிடாதீர்கள்; நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்பதே

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!