Latestமலேசியா

கேமரன் மலையில் சோகம்: குழியில் விழுந்து ஜெர்மன் சுற்றுப் பயணி பலி

பஹாங், கேமரன் மலை, தானா ராத்தா காட்டு நடைபாதை 10-ல் நடைப்பயணம் மேற்கொண்ட ஜெர்மன் நாட்டுச் சுற்றுப் பயணி ஒருவர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

​நேற்று நண்பகல் 12 மணியளவில் பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குக் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, 16 பேரடங்கிய மீட்புக் குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
​மலையடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில், பழைய நீர்வழிப்பாதை எனக் கருதப்படும் குழியில் விழுந்த 58 வயது பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டது.

​சம்பவத்தின் போது அவருடன் நடைப்பயணம் மேற்கொண்ட 57 வயது பெண் துணைவர் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

​உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகப் பலியானவரின் உடல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!