Latestமலேசியா

உலக அரங்கில் ‘மடானி’ அரசதந்திரம்: 18-ஆவது பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டுக்காக பிரதமர் அன்வார் புது டெல்லி சென்றடைந்தார்

18-ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியத் தலைநகர் புது டெல்லி சென்றடைந்துள்ளார்.

அன்வாரை ஏற்றியிருந்த சிறப்பு விமானம், Palam ஆகாயப் படைத் தளத்தில் இந்திய நேரப்பட்டி நேற்று மாலை 6.30 மணிக்குத் தரையிறங்கியது.

இரு நாட்டு அதிகாரிகளும் அவரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் அமைப்பின் நட்பு நாடாக மலேசியா இதில் பங்கேற்கிறது.

இதன் மூலம் மலேசியாவின் ‘மடானி’ அரசதந்திரத்தை உலக அரங்கில் பிரதமர் முன்னெடுக்கிறார்.

மாநாட்டின் நாளையத் தொடக்க விழாவில் அன்வார் தேசிய உரையை பிரதமர் ஆற்றவுள்ளார்.

உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதில் கவனம் செலுத்தப்படும்.

மலேசியாவின் இந்த பங்கேற்பு, உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்பில் நாட்டின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!