Latestமலேசியா

தாசேக் பேரா நில அமலாக்க நடவடிக்கை: வாகனத்தைச் சேதப்படுத்தி ஆடவரைத் தாக்கிய சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு

பஹாங், அக். 15 – பஹாங் தாசெக் பேரா (Tasek Bera) வனப் பாதுகாப்புப் பகுதியில் நடைபெற்று வரும் நில அமலாக்க நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில், கம்போங் குவாலா செர்த்திங் (Kampung Kuala Serting) பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) வாகனத்தின் பக்கக் கண்ணாடியைச் சந்தேக நபர் சேதப்படுத்தியதுடன், அருகில் நின்றிருந்த ஆடவர் ஒருவரின் தோள்பட்டையில் குத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

பேரா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்தெண்டன் ஸுல்கிஃப்லீ நசீர் (Zulkiflee Nazir) கூறுகையில், மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி சந்தேக நபரைத் தேடி வருவதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை அணுகுமாறும் கேட்டுக்கொண்டார்.

காயம் ஏற்படுத்துதல் மற்றும் சொத்துகளைச் சேதப்படுத்துதல் தொடர்பான குற்றங்களுக்காக, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது. தாசெக் பேரா வனப் பாதுகாப்புப் பகுதியில் நில ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில் அதிகாரிகள் நில அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நடவடிக்கைக்குத் தடைகள் மற்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!