Latestமலேசியா

பாசிர் கூடாங் குப்பைக் கிடங்கில் பெரும் தீ – அதிகாலை வரை நீடிக்கும் தீயணைப்புப் பணி

ஜோகூர் பாரு, அக்டோபர் 15 – ஜோகூர், பாசிர் கூடாங் (Pasir Gudang), கம்போங் பாசிர் பூத்தே (Kampung Pasir Putih), ஜாலான் முஹிப்பாவிலு,ள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ, இன்று அதிகாலை வரை நீடித்தது.

நேற்று இரவு 10.04 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதைத் தொடர்ந்து, பாசிர் கூடாங் மற்றும் ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 18 வீரர்கள், நான்கு அவசரகால வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 0.0232 ஹெக்டேர் பரப்பளவில் குவிந்திருந்த குப்பைகள் தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அருகில் போதிய நீர் ஆதாரம் இல்லாததால், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், சம்பவ இடத்திலிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீயணைப்பு நீர்க்குழாயிலிருந்து தண்ணீர் நிரப்ப வீரர்கள் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டியிருந்தது. அருகிலிருந்த கடல் நீரையும் பயன்படுத்தி தீயணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிகாலை 5.33 மணியளவில், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டன. இச்சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!