Latestமலேசியா

தாவாவ் விமான நிலையத்தில் விஷத்தைத் துப்பும் நாகப்பாம்பு கண்டுபிடிப்பு

தாவாவ், அக்டோபர்-15,சபா, தாவாவ் விமான நிலையத்தில், விஷத்தைப் பீய்ச்சியடிக்கும் நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்தில் அவசரகாலப் பயிற்சி நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், அலுவலகம் ஒன்றின் நுழைவாயில் அருகே அந்தப் பாம்பு காணப்பட்டது.

முன்னதாக, விமான நிலையத்தில் குளவிக்கூடு இருப்பதாகக் கிடைத்த தனிப் புகாரைத் தொடர்ந்து, APM எனப்படும் பொதுத் தற்காப்புப் படையினர் அங்கு சென்றிருந்தனர்.

அந்த நேரத்தில் நாகப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் ஆபத்தில்லாமல் பாம்பு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது.

விஷத்தைப் பீய்ச்சியடிக்கும் இந்த வகை நாகப்பாம்பு, மனிதர்களின் கண்களில் விஷத்தைச் செலுத்தக்கூடிய ஆபத்தான தன்மையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!