Latestமலேசியா

நஜிப் எஞ்சிய SRC சிறைத்தண்டனையை குடும்பத்துடன் வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி

கோலாலம்பூர், அக்டோபர்-15,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், எஞ்சிய சிறைத்தண்டனையைத் தனது குடும்பத்தினருடன் வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், லங்காக் டூத்தாவில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் வீட்டுக் காவல் அமுல்படுத்தப்படும் என நஜிப்பின் வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட் ஷாஃபி அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

SRC International வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நஜிப்பிற்கு, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடந்த மாதம் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கினார்.

இதன்படி, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தியதும், நஜிப் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் இருக்க முடியும்.

வீட்டுக் காவலுக்கான விதிமுறைகள் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தற்போது நஜீப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அவற்றின் விவரங்களை வெளியிடுவதற்கு சிறைச் சாலை இலாகா தடை விதித்துள்ளதாக ஷாஃபி சொன்னார்.

இதனிடையே, 1MDB வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய நஜீப்பின் மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!