
பாங்காக், மே 19 – தாய்லாந்தில் ஜனவரி 1 முதல் மே 14 வரை கோவிட்19 தொற்றால் 71,067 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 19 இறப்புகள் பதிவாகியுள்ளன.
தொடக்கத்தில், கோவிட் -19 தொற்று குறைந்த நிலையில் இருந்ததாகவும், சாங்க்ரான் விடுமுறையைத் தொடர்ந்து, தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்ததாகவும் தாய்லாந்து தகவல் மையம் கருத்துரைத்துள்ளது.
இதனிடையே, மருத்துவ அறிவியல் துறை தரவுகளின்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தாய்லாந்தில் ஓமிக்ரான் XEC எனும் புதிய தொற்றும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், அறிகுறிகளைக் கண்காணித்து, அடிக்கடி கைகளைக் கழுவவும், நெரிசலான பகுதிகளிக்கு முகமூடிகளை அணிந்து செல்லவும் பொதுமக்களுக்கு மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.