
கோலாலம்பூர், நவம்பர்-1,
2025 SPM தேர்வுகள் வரும் திங்கட்கிழமை நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெறும்.
நாடு முழுவதும் 3,350 தேர்வு மையங்களில் மொத்தம் 413, 372 மாணவர்கள் தேர்வில் அமருகின்றனர்.
நவம்பர் 3 முதல் 6 வரை மலாய் மொழி வாய்மொழி தேர்வும், நவம்பர் 10 முதல் 13 வரை ஆங்கில வாய்மொழித் தேர்வும் நடைபெறும்.
அறிவியல் நடைமுறை சோதனை நவம்பர் 17 தொடங்கி 19 வரையிலும், மலாய் – ஆங்கில கேட்கும் சோதனைகள் நவம்பர் 20-ஆம் தேதியும் நடத்தப்படும்.
எழுத்துப்பூர்வத் தேர்வுகள் நவம்பர் 25 தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெறும்.
SPM தேர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய 127,526 கண்காணிப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர்.
SPM தேர்வுக்கான முழு அட்டவணையை lp.moe.gov.my என்ற இணைய அகப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என, மலேசியத் தேர்வு வாரியமான LPM கூறியது.



