Latestமலேசியா

திருங்கானுவில் வாகனம் மோதி காட்டு விலங்கான பெண் தபீர் உயிரிழப்பு

திரெங்கானு, அக்டோபர் 30 – திரெங்கானு டுங்குன் (Dungun), கம்போங் செர்டாங் (Kampung Serdang) அருகே, டுங்குன்–புக்கிட் பெசி (Dungun–Bukit Besi) சாலையில் நேற்று இரவு வாகனம் மோதியதாக நம்பப்படும் சம்பவத்தில், சுமார் 200 கிலோகிராம் எடையுள்ள பன்றியைப் போன்ற உடலமைப்பும், நீண்டு வளைந்த தும்பிக்கை போன்ற மூக்கும் கொண்ட பெண் தபீர் ஒன்று உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து இரவு 8.30 மணிக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக, திரெங்கானு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையின் (Perhilitan) இயக்குநர் டென்னிஸ் டென் சூன் யுங் (Dennis Ten Choon Yung) தெரிவித்தார்.

உயிரிழந்த தபீரின் தலையில் காயங்களும் உடலில் கீறல்களும் காணப்பட்டதாக அவர் கூறினார். சம்பவம் நிகழ்ந்த இடம் புக்கிட் பாவுக் வனக் காப்பகத்திலிருந்து (Hutan Simpan Bukit Bauk) சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் வனவிலங்குகள் சாலையைக் கடக்கும் இடம் குறித்த எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்குகள் கடக்கும் இடங்களுக்கு அருகில் வாகனமோட்டும்போது எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், எச்சரிக்கைப் பலகைகளைக் கவனிக்குமாறும் வாகனமோட்டிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!