
ஜெருசலம், அக்டோபர்-30,இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் வலதுசாரிக் கூட்டணி பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், அந்நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், நெத்தன்யாஹுவின் கூட்டணி 53 இடங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதையடுத்து, 19 இடங்களை வென்றுள்ள அரபுக் கட்சிகள், அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளன.
நெத்தன்யாஹுவின் Likud கட்சி 27 இடங்களுடன் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான Gadi Eisenkot, சில நிபந்தனைகளுடன் அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை எதிர்கட்சி ஆட்சி அமைத்தால், நெத்தன்யாஹு மீது பல்வேறு ஊழல் வழக்குகளும், தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கும் பாயுமென்பது உறுதி.
எனினும், எந்தக் கூட்டணியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்தாண்டு தொடக்கத்தில் இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



