Latestஉலகம்

திரைப் பிரச்சினை: iPhone Duo சாதனங்களை மாற்றிக் கொடுக்க Apple முடிவு

சான் பிரான்சிஸ்கோ, அக்-27-திரைப் பிரச்சினைகள் காணப்படும் தனது புதிய மடிக்கக்கூடிய iPhone Duo சாதனங்களை மாற்றிக் கொடுப்பதாக Apple நிறுவனம் அறிவித்துள்ளது. உள் திரையில் விரிசல்கள் மற்றும் கோடுகள் தோன்றுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த வாரம் விற்பனைக்கு வந்த iPhone Duo ஆரம்பகட்டத்தில் இணையம் வழி சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. உலகின் பல்வேறு பகுதிகளில் வாடிக்கையாளர்கள் அச்சாதனத்தை வாங்கக் காத்திருந்தனர். இந்நிலையில், அதன் மைய மடிப்புப் பகுதியில் திரைப் பிரச்சினைகள் காணப்படுவதாகப் வார இறுதியில் சமூக ஊடகங்களில் படங்கள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சாதனங்களில் பிரச்சினைகள் விரைவாக உருவாகலாம் என ஆப்பிள் நிறுவனம் ஒப்புக் கொண்டது. பயனர்கள் தங்களது சாதனத்தின் திரையில் சிக்கல்களை எதிர்கொண்டால், மாற்றுச் சாதனத்தைப் பெற AppleCare சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டது. எனினும், அப்பிரச்சினைக்கான காரணம் குறித்து அது விளக்கமளிக்கவில்லை.

மின்னணு சாதனங்களைப் பிரித்துப் பரிசோதிக்கும் iFixit நிறுவனம் நடத்திய ஆய்வில், திரையின் அடியில் உள்ள மைய ஆதரவுப் பட்டைக்கு அருகே சேதம் ஏற்படக்கூடும் எனக் கண்டறியப்பட்டது. சாதனத்தை மடிக்கும்போது அந்தப் பகுதி திரைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், தாங்கள் ஆய்வு செய்த மடிக்கக்கூடிய தொலைபேசிகளில் iPhone Duo பழுதுபார்ப்பதற்கு எளிதானது என்றும் iFixit குறிப்பிட்டது. அது குறித்து Apple உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

இவ்வேளையில், பாதிக்கப்பட்ட சாதனங்களை உடனடியாக மாற்றிக் கொடுக்கும் Apple நிறுவனத்தின் முடிவு சரியான முதல் நடவடிக்கை என சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி IDC தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு Samsungங்கின் Galaxy Fold சாதனத்தில் ஏற்பட்ட திரைப் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டிய அது, விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் இத்தகைய தயாரிப்புப் பிரச்சினைகளின் தாக்கத்தைக் குறைக்க உதவும் எனக் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!