
சியோல், மே-3-பரபரப்பான நகர வாழ்க்கைக்கு இடையே, தென் கொரியத் தலைநகரான சியோல் நேற்று அமைதியையும் ஆழ்ந்த உறக்கத்தையும் கொண்டாடியது.
ஆம், 2026-ஆம் ஆண்டுக்கான ‘Hangang தூக்கப் போட்டி’ நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
வசந்த கால வெயிலுக்கு இடையே, ஹான் ஆற்றின் கரையில் நூற்றுக்கணக்கான சியோல் மக்கள் அந்த வினோதமான சவாலுக்காகக் கூடினர்.
யாரால் எவ்வளவு ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்ள முடியும் என்பதுதான் அந்தப் போட்டியே.
போட்டியாளர்கள் ‘தூங்கும் அழகிகள்’ அல்லது ‘இளவரசர்கள்’ போல உடை அணிந்து வர வேண்டும் என்பது கூடுதல் சிறப்பு.
வெற்றியாளரைத் தீர்மானிக்க, ஒவ்வோர் அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை போட்டியாளர்களின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டது.
இவ்வாண்டின் வெற்றியாளராக 80 வயது முதியவர் ஒருவர் அறிவிக்கப்பட்டார்.
இரண்டாம் இடத்தைப் பிடித்த 37 வயது அலுவலக ஊழியர் ஒருவர், தனது கடினமான இரவு நேரப் பணியிலிருந்து ஓய்வெடுக்கவே இந்தப் போட்டியில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார்.
தென் கொரியா உலகிலேயே அதிக வேலைப்பளுவும் தூக்கமின்மையும் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.
எனவே, இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல…
சியோல் போன்ற ‘தூங்கா’ நகரங்களில், அவ்வப்போது கண்களை மூடி ஓய்வெடுப்பதே நாம் செய்யும் ஆக்கபூர்வமான விஷயமாக இருக்கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது…



