Latestமலேசியா

தெமர்லோவில் பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை; சந்தேகத்திற்குரிய நபர் கைது

தெமர்லோ, மார்ச் 9- தெமர்லோ, கெர்டாவ், கம்போங் தேசா முர்னியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 42 வயது நபரை, குற்றம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, போலீசார் கைது செய்தனர்.

அதிகாலை மணி 4.15க்கு தெமர்லோ குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டான்.

மார்ச் 7 ஆம்தேதி நடந்த அந்த கொள்ளையின்போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் புரோட்டான் Persona கார் மற்றும் பாராங் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் நஸ்யிம் பாரோன் ( Mohd Nasyim Bahron ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த சந்தேக நபர் இரவு மணி 7.30 அளவில் முகமூடி அணிந்து, ஒரு பையுடன் பெட்ரோல் நிலையத்தில் நுழைந்து கேஷியர் முகப்பிடத்திற்கு நடந்து சென்று ஊழியர்களை நோக்கி ஒரு பராங்கைக் கத்தியினால் மிரட்டி அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி பதிவு எண் இல்லாத பெர்சோனா காரை ஓட்டிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளான் இதனால் அந்த பெட்ரோல் நிலையத்திற்கு சுமார் 2,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Mohd Nasyim குறிப்பிட்டார்.

மேலும் அந்த நபரிடமிருநது ஒரு மோட்டார் சைக்கிள் , ஒரு தலைக்கவசம் , முகமூடி , ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!