Latestமலேசியா

தெருநாய்களைப் பிடிக்கவோ கொல்லவோ வேண்டாம் – கெடா கால்நடை மருத்துவ இலாகா எச்சரிக்கை

அலோர் ஸ்டார், செப்டம்பர்-29,ரேபிஸ் நோய் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தெருநாய்களை பொது மக்கள் தாங்களாகவே பிடிக்கவோ, அடிக்கவோ அல்லது கொல்லவோ வேண்டாம் என்று கெடா கால்நடை மருத்துவச் சேவை இலாகா எச்சரித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான விலங்குகள் சுற்றித் திரிந்தால், பொது மக்கள் அவற்றை நெருங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குபாங் பாசுவைச் சேர்ந்த 31 வயது ஆடவர் ஒருவர், ஆகஸ்ட் மாதம் தெருநாய் கடித்ததைத் தொடர்ந்து ரேபிஸ் நோயால் நேற்று உயிரிழந்தார்.

1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு கெடாவில் பதிவான முதல் மனித ரேபிஸ் சம்பவம் இதுவாகும்.

இதையடுத்து, அலோர் ஸ்டார் மற்றும் குபாங் பாசுவில் கால்நடை மருத்துவ இலாகா நடவடிக்கை அறைகளைத் திறந்துள்ளது.

இதனிடையே, நாய் அல்லது பூனை கடித்தாலோ கீறினாலோ, காயத்தை சோப்பு மற்றும் நீரில் குறைந்தது 15 நிமிடங்கள் உடனடியாகக் கழுவ வேண்டும்.

காயம் சிறியதாக இருந்தாலும் அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவமனை அல்லது கிளினிக் சென்று உரிய சிகிச்சை பெறுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!