Latestஉலகம்

தொடர்ந்து அழுததற்காக 2வயது மகளை கொன்ற ஆடவர் கைது

அமெதபாத் , ஜூன் 18 – தொடர்ந்து அழுது கொண்டிருந்த 2 வயது  மகளை கழுத்து நெரித்து கொன்ற  Ahmedabad  ஆடவர் கைது செய்யப்பட்டார்.  அந்த குழந்தை  கழுத்து நெரிக்கப்பட்டதை தொடர்ந்து  அதன்  நுரையீரல் மற்றும்  சுவாச குழாய்  பாதிக்கப்பட்டதால்   இறந்ததாக  மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.   

அந்த குழந்தையின் தந்தையான   பழைய துணிகளை சேகரிக்கும்  25 வயதுடைய    Mukesh Valmike  என்று  அடையாளம்  கூறப்பட்ட  நபருக்கு எதிராக  போலீசார் கொலை வழக்கை பதிவு செய்தனர்.  அந்த குழந்தையின் உடல்   Khedbrahma வில்   Harnev  ஆற்றின் தூணுக்கு அருகே   Mukesh  தூக்கி வீசியுள்ளார். அந்த பாலத்திற்கு அருகே  நடந்த  சென்றவர்கள் முகேஷை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.   

அந்த குழந்தையை பொதுமக்கள்  அருகேயுள்ள   Khedbrahma  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும்  அக்குழந்தை இறந்துவிட்டதை அங்குள்ள மருத்துவர் உறுதிப்படுத்தினார் . அக்குழந்தையை விட்டு அதன் தாயார் சென்றுவிட்டதால் அதனை முகேஸ் கவனித்து வந்ததாக கூறப்பட்டது. 

சரியான முறையில்  உணவு   ஊட்டப்படாததால் அக்குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதோடு  தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால்   ஆத்திரமடைந்த    முக்கேஷ் அக்குழந்தையை கொன்றதாக   குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!