Latestமலேசியா

நச்சுப் பொருள் கண்டுபிடிப்பு; அழகுசாதன கிரீமுக்கான அனுமதி இரத்து

புத்ராஜெயா, ஆகஸ்ட்-25-தடைச் செய்யப்பட்ட நச்சுப் பொருள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, Remy Laure Soothing Cream என்ற அழகுசாதனப் பொருளுக்கான அனுமதியை சுகாதார அமைச்சு இரத்துச் செய்துள்ளது.

அந்தக் கிரீமில், கட்டுப்படுத்தப்பட்ட நச்சுப் பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ள Hydroquinone கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Hydroquinone கொண்ட பொருட்கள் மருந்துகளாக வகைப்படுத்தப்படுவதுடன், அவை சந்தைப்படுத்தப்படுவதற்கு முன்னர் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில் பதிவுச் செய்யப்பட வேண்டும் என KKM கூறியது.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்றி Hydroquinone பயன்படுத்துவது, சருமத்தின் நிறத்தில் தேவையற்ற மாற்றங்கள் மற்றும் தோல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, Remy Laure Soothing Cream-மை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைப் பயன்படுத்தியதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுமாறும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!