Latestமலேசியா

பினாங்கு விரைவுச்சாலையில் லாரி கவிழ்ந்தது: 2 மணி நேரம் கடும் நெரிசல்

ஜார்ஜ்டவுன், அக்-09-Tun Dr Lim Chong Eu விரைவுச்சாலையில் லாரி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போக்குவரத்து நெரிசலில் ஆயிரக்கணக்கான வாகனமோட்டிகள் சிக்கித் தவித்தனர்.

காலை 7 மணிக்கு முன்னதாக நிகழ்ந்ததாகக் கருதப்படும் அவ்விபத்தில் பேருந்தும் லாரியும் சம்பந்தப்பட்டிருந்தன. லாரி கவிழ்ந்ததால் பரபரப்பான அந்த விரைவுச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் Sungai Dua மற்றும் Juru டோல் சாவடிகள் வரை நீடித்ததாக சமூக ஊடகப் பயனர்கள் தெரிவித்தனர். சிலர் பள்ளி மற்றும் பணிக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பதிவிட்டனர்.

பினாங்கு சென்ட்ரலில் இருந்து RECSAM செல்ல வழக்கமாக 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும் நிலையில், விபத்து காரணமாக 120 நிமிடங்கள் வரை பயண நேரம் அதிகரித்ததாக மற்றொரு பயனர் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

விபத்துக்கான காரணம், யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா, தற்போதைய போக்குவரத்து நிலவரம் ஆகியவை குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!