Latestஇந்தியா

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை, நவம்பர்-25,தமிழகத்தின் திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

நேற்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ என முழக்கமிட்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இவ்வாண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தை ஏற்றுவதற்காக ஆயிரம் மீட்டர் காடாத் துணி சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் மலை உச்சிக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மகா தீபத் திருவிழாவைக் காண 8,500 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த நிலையில், 15,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக திருவண்ணாமலை விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!