Latestமலேசியா

சமாட் சாயிட்டின் மக்கள் மீதான அன்பு அவரது படைப்புகள் வழி என்றும் நிலைத்திருக்கும் – பிரதமர் அன்வார் இரங்கல்

கோலாலம்பூர், நவம்பர்-25,மறைந்த தேசிய இலக்கியவாதி டத்தோ ஸ்ரீ A. சமாட் சாயிட்டின் மக்கள் மீதான அன்பு, அவரது இலக்கியப் படைப்புகள் வழி என்றும் நிலைத்திருக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

‘பாக் சமாட்’ என அன்புடன் அழைக்கப்பட்ட அவரது மறைவுச் செய்தி தம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருப்பதாக பிரதமர் கூறினார்.

1961-ஆம் ஆண்டு வெளியான ‘சாலினா’ நாவல் வாயிலாக, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் துயரங்களையும் அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள பாக் சமாட் வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

மலாய் மொழியைப் பாதுகாப்பதிலும் சமூக நீதிக்காகப் போராடுவதிலும் பாக் சமாட் உறுதியுடன் செயல்பட்டதாகவும் அன்வார் புகழாரம் சூட்டினார்.

வயது மூப்பு தொடர்பான உடல்நலப் பிரச்னைகளுக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாக் சமாட், நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

அவருக்கு வயது 91.

70 ஆண்டுகளுக்கும் மேலாக மலாய் இலக்கியத் துறையில் பங்காற்றிய அவருக்கு, 1985-ஆம் ஆண்டு தேசிய இலக்கியவாதி விருது வழங்கப்பட்டது.

இன மதம் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!