கோலாலம்பூர், டிசம்பர்-18 – நவம்பர் 30 வரைக்குமான eKasih தரவுகளின் படி, மலாக்கா, நெகிரி செம்பிலான், பெர்லிஸ், புத்ராஜெயா ஆகியவை நாட்டில் பரம ஏழைகள் அற்ற இடங்களாக உள்ளன.
மற்ற மாநிலங்களிலும் பரம ஏழைகள் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக, பொருளாதார அமைச்சு மேலவையில் கூறியது.
இந்நிலையானது, பரம ஏழ்மையைத் துடைத்தொழிக்கும் மடானி அரசாங்கத்தின் முயற்சி நல்ல பலனைத் தந்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.
நடப்பில் நாடு முழுவதும் 2,191 குடும்பங்கள் பரம ஏழைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆக அதிகமாக கோலாலம்பூரில் 474 குடும்பங்களும், கெடாவில் 341 குடும்பங்களும், சபாவில் 289 குடும்பங்களும் உள்ளன.
ஜோகூரில் 275 குடும்பங்கள், பஹாங்கில் 174 குடும்பங்கள் பினாங்கில் 122 குடும்பங்கள், சிலாங்கூரில் 112 குடும்பங்கள் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
திரங்கானுவில் 103, கிளந்தானில் 99, சரவாக்கில் 91, பேராக்கில் 62, லாபுவானில் 49 என பரம ஏழைக் குடும்பங்கள் பதிவாகியுள்ளன.
ஏழ்மைத் துடைத்தொழிப்பில் அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களைச் செயல்டுத்தி வருமென அமைச்சு உத்தரவாதமளித்தது.