
குவாலா சிலாங்கூர், பிப்ரவரி-3 – புன்ச்சாக் ஆலாம், ஆலாம் ஜயா வர்த்தக மையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விபச்சாரம் எதுவும் நடக்கவில்லை என போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது.
டிக் டோக்கில் அப்படியொரு குற்றச்சாட்டு வைரலானதை அடுத்து, குவாலா சிலாங்கூர் போலீஸ் அங்கு இன்று அதிகாலை சோதனை நடத்தியது.
எனினும், விபச்சார நடவடிக்கை எதுவும் அங்கு நடக்கவில்லை என்பது சோதனையில் உறுதியானதாக, மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் அசாருடின் தஜுடின் கூறினார்.
எனவே, பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் இது போன்ற உறுதிபடுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாமென, பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விலைமாதர் சேவை வழங்கப்படுவதாகவும், எனவே போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், டிக்டோக் கணக்கின் உரிமையாளர் ஒருவர் முன்னதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.