ஈப்போ, நவம்பர் -11 – பேராக், மஞ்சோங்கில் பிராணிகளைக் கொன்று புதைக்குமிடம் எனக் கூறி வைரலாகியுள்ள வீடியோ உண்மையானதல்ல என, மஞ்சோங் போலீஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.
டிக் டோக்கிலும் முகநூலிலும் வைரலான அந்த 16 வினாடி வீடியோ குறித்து மஞ்சோங் நகராண்மைக் கழகம் நேற்று முன்தினம் புகாரளித்தது.
விசாரணை நடத்தியதில், பெரியக் குழியில் நாய்களின் சடலங்கள் இருப்பதைக் காட்டும் அவ்வீடியோ, சம்பவ இடத்தை முழுமையாகச் சித்தரிக்கவில்லை.
ஆகவே அது மஞ்சோங் வட்டாரத்தில் தான் நடந்துள்ளது என்பதற்கான ஆதாரம் இல்லை.
இந்நிலையில் அச்சம்பவத்திற்கான காரணத்தை விசாரித்து வருவதாக, மஞ்சோங் போலீஸ் தலைவர் ACP Hasbullah Abd Rahman கூறினார்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பதிவேற்றியதற்காக, தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெறும்.
மஞ்சோங் வட்டாரத்தில் நாய்களைப் பிடித்து சுட்டுக் கொன்று அவற்றைப் பெரியக் குழிகளில் வீசுவதாகக் கூறி கடந்த ஒரு வாரமாகவே பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.