
வாஷிங்டான், செப்டம்பர் 17 – நாசா ஆய்வாளர் ராபர்ட் வாக்னர் (Robert Wagner), நிலவில் சமீபத்தில் உருவான 222 மீட்டர் அகலமுள்ள பள்ளம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
“மெக்கெட்சின்” (McGetchin) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளம், 2024ஆம் ஆண்டு வசந்த காலத்தில் விண்கல் அல்லது வால்நட்சத்திரம் மோதியதால் உருவாகியிருக்கலாமென நாசா தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பெரிய பள்ளம் உருவாவது நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதைவிட நீண்ட கால இடைவெளியில் நிகழும் அரிய சம்பவமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பு நிலவின் புவியியல் தன்மையைப் புரிந்துகொள்ளவும், எதிர்கால மனித விண்வெளிப் பயணங்களுக்கான திட்டமிடலுக்கும் உதவுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



