Latestமலேசியா

தகுதியுள்ள புதிய பொது உயர்க்கல்விக்கூட மாணவர்களுக்கு 500 ரிங்கிட் விமானக் கட்டண உதவி – பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், செப்-17–இவ்வாண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் பொது உயர்க்கல்விக்கூடங்களில் இணையும் தகுதியுள்ள புதிய மாணவர்களுக்கு, உள்நாட்டு விமானப் பயண டிக்கெட்டுகளை வாங்க on-off எனும் ஒரே முறை 500 சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை அறிவித்திருக்கிறார்.

இந்த உதவியால் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் மற்றும் லாபுவான் இடையே விமானத்தில் பயணம் செய்து கல்வியைத் தொடர வேண்டிய 7,095 மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் சுமையைக் குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்படுவதாக அவர் பிரதமர் கூறினார்.

பொதுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்குகள் மற்றும் சமூகக் கல்லூரிகளில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதனிடையே, சரவாக்கிற்கான இடைக்கால சிறப்பு மானியம் இவ்வாண்டு 600 ரிங்கிட் மில்லியனிலிருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார். ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறப்பு மானியத் தொகையை நிர்ணயிப்பதற்கான நிலையான நடைமுறையை இறுதி செய்ய, சபா மற்றும் சரவாக் மாநில அரசுகளுடன் மத்திர அரசு தொடர்ந்து கலந்துரையாடும் என அவர் குறிப்பிட்டார்.

சரவாக், கூச்சிங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான ‘மலேசிய தினம் 2026’ கொண்டாட்டத்தின் போது பிரதமர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!