
கடந்தாண்டு ஜூலை மாதம், UPSI பலக்லைக்கழக மாணவியான நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய காவல்துறையில் பணிபுரியும் லென்ஸ் கோப்ரல் முகமது அலிஃப் மோன்ஜானி இன்று நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்துள்ளார்.
காணாமல் போன அம்மாணவி 5 நாட்களுக்கு பிறகு, ஸ்ரீ கெலேடாங்கிலிருக்கும் எண்ணெய் பனைத் தோட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அச்சந்தேக நபர் தற்போது குற்றத்தை மறுத்துள்ளதால், நீதிபதி ஜூலை 15 ஆம் தேதி இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 40 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.