
சிங்கப்பூர், செப்டம்பர் 18 – Unique Good Morning Candies மற்றும் Unique Good Night Candies ஆகிய மிட்டாய்களில் தடைசெய்யப்பட்ட மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கியிருப்பதாக, சிங்கப்பூர் உணவு நிறுவனம் கண்டறிந்துள்ளது.
எடை இழப்பு, கொழுப்பு குறைத்தல், பசியைக் கட்டுப்படுத்துதல், செரிமானத்திற்கு உதவுதல் என பல்வேறு துரித மாற்றங்களுக்காக வெளியிடப்பட்ட 4 தயாரிப்புகளாகும் அந்த மிட்டாய்கள்.
இந்நிலையில், அதன் தயாரிப்புகளை உடனடியாக விற்பனை செய்வதை நிறுத்துமாறும் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட மற்றும் மருந்துப் பொருட்களுடன் கலப்படம் செய்யப்பட்ட பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வழங்குநர்களுக்கும் எதிராகவும் கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் கூறியுள்ளது.