Latestஅமெரிக்காஉலகம்

பசிபிக் பெருங்கடலில் 2 மாதங்களுக்கும் மேலாகத் தத்தளித்த 86 வயது மாலுமி உயிருடன் மீட்பு

அமெரிக்கா, நவம்பர் 3 – பசிபிக் பெருங்கடலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாகக் காணாமல் போயிருந்த 86 வயது மாலுமி ஒருவர், தனது வளர்ப்பு நாயுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது படகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குப் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கலிபோர்னியாவின் சான் டியாகோ (San Diego) கடற்கரையிலிருந்து சுமார் 460 மைல் தொலைவில் அமெரிக்கக் கடலோரக் காவல்படை (US Coast Guard) தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

அப்போது அவ்வழியாகச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று, மாலுமியையும் அவரது நாயையும் பாதுகாப்பாக மீட்டது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாகக் கடலில் இருந்ததால் அவர் உடல் பலவீனமடைந்து நடப்பதற்குச் சிரமப்பட்டாலும், பெரிய காயங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது நாயும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!